Developed by - Tamilosai
ஐந்தாவது பிம்ஸ்டெக் மாநாடு இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கொழும்பில் உத்தியோக பூர்வமாக ஆரம்பமாக உள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று 28ஆம் திகதி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
மாநாட்டில் இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், தாய்லாந்து ஆகிய நாடுகளில் வெளிநாட்டு அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இன்றும் நாளையும் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பங்குபற்றும் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
எதிர்வரும் 30ஆம் திகதி இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் மற்றும் தாய்லாந்து நாடுகளில் அரச தலைவர்களின் மெய்நிகர் பங்கேற்புடன் ஐந்தாம் பிம்ஸ்டெக் உச்சி மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ளது.
மாநாட்டிலும் அதுதொடர்பான கலந்துரையாடல்களிலும் பிராந்திய குழுவாக பிம்ஸ்டெக் அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறும்.
உச்சி மாநாட்டின் போது பிம்ஸ்டெக் சாசனம் ஏற்கப்பட்டு பல சட்ட ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.