Developed by - Tamilosai
சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முதன்முறையாக சர்வதேச பூப்பந்து போட்டியில் பங்குபற்றுவதற்கு தகுதி பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சஹான் பிரதீப் விதானஎன்பவருக்கே இந்த தகுதி கிடைத்துள்ளது.
பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பங்கேற்பது நாட்டின் வரலாற்றில் இதுவே முதல்முறை.
இந்தப் போட்டி நாளை மறுதினம் (25ம் திகதி) முதல் அடுத்த மாதம் 5ம் திகதி வரை ஸ்பெயினின் செவில்லி நகரில் நடைபெறவுள்ளது.
கடவத்தை மகா போதி கல்லூரி மற்றும் கடவத்தை மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான சஹான், 2019 ஆம் ஆண்டு கம்பஹா மாவட்ட பூப்பந்தாட்ட சம்பியன்ஷிப், 40 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் கம்பஹா மாவட்ட சம்பியன்ஷிப், அகில இலங்கை பூப்பந்தாட்ட சம்பியன்ஷிப் மற்றும் அகில இலங்கை பூப்பந்து சாம்பியன்ஷிப் மற்றும் 2021 ஆம் ஆண்டு நுவரெலியாவில் நடைபெற்ற அகில இலங்கை சம்பியன்ஷிப் ஆகியவற்றை வென்றுள்ளார்.
மேலும், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அகில இலங்கை எல்லே சம்மேளனத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.