Developed by - Tamilosai
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் காணாமல் போன 15 வயது சிறுமியை மீட்டதுடன் அந்த சிறுமியை அழைத்துச் சென்ற வவுனியாவைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரை நேற்று (03) கொக்கட்டிச்சோலையில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி வீட்டில் இருந்த நிலையில் காணாமல் போயுள்ளார். இதனையடுத்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
குறித்த சிறுமி 42 வயதுடைய வவுனியாவைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட காதல் காரணமாக வீட்டை விட்டு சிறுமி வெளியேறி குறித்த நபருடன் புத்தளத்திற்கு சென்று மறைந்திருந்தார்.
சிறுமியின் உறவினர்கள் சிறுமியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீட்டுக்கு வருமாறு அழைக்க தலைமறைவாகியிருந்த இருவரும் கொக்கட்டிச்சோலைக்கு வந்த நிலையில் பொலிசார் குறித்த சிறுமியை மீட்டதுடன் அவரை அழைத்துச் சென்ற நபரை கைது செய்துள்ளதுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.