தமிழ் ஓசை
தமிழ் ஓசை

யுனெஸ்கோ நிர்வாக சபைக்கு இலங்கை 144 வாக்குகளுடன் தெரிவு

0 32

ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் (யுனெஸ்கோ) நிர்வாக சபைக்கு இலங்கை 144 வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

2023-2027 காலகட்டத்திற்கான 58 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்புக்கான தேர்தல் நேற்று (15 புதன்கிழமை) பரிஸில் நடந்த 42 வது யுனெஸ்கோ பொது மாநாட்டில் நடைபெற்றது.

வாக்களிப்புச் செயற்பாட்டில் பங்குபற்றிய 188 உறுப்பு நாடுகளில் 144 வாக்குகளைப் பெற்று இலங்கை நிறைவேற்று சபையில் தனது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில், ஒன்பது வேட்பாளர்களில் ஆறு பேர் யுனெஸ்கோ உறுப்பு நாடுகளால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இலங்கையுடன், பாகிஸ்தான், இந்தோனேஷியா, பங்களாதேஷ், கொரியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இப்பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளாகும்.

Leave A Reply

Your email address will not be published.