Developed by - Tamilosai
1987ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி யாழ் – அல்வாய் வேலிலந்தை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஒபரேசன் லிபரேசன் இராணுவ நடவடிக்கையின் போது இடம் பெயர்ந்து பாதுகாப்பென நம்பி தங்கியிருந்தவர்கள் மீதே விமான குண்டுதாக்குதல், எறிகணை தாக்குதல் மூலம் 18 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 வது நினைவேந்தல் நேற்று பிற்பகல் யாழ் – அல்வாய் மனோகரா சனசமூக நிலையத்தின் தலைவர் செல்லத்தம்பி சுபேந்திரா தலமையில் இடம் பெற்றுள்ளது. முதல் நிகழ்வாக பொது சுடர் ஏற்றப்பட்டு பின்னர் மலர் அஞ்சலி, அகவணக்கம் என்பன இடம்பெற்றன.