Developed by - Tamilosai
கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 35 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சின் கொரோனா தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் 15 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் பூஸ்டர் தடுப்பூசியினை அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொது இடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களிலும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.