தமிழ் ஓசை
தமிழ் ஓசை

3 வேளை உணவைக் கூட பூர்த்தி செய்யமுடியாத நிலையில் பல குடும்பங்கள்

0 70

இலங்கையில் உள்ள 20 சதவீத குடும்பங்கள் 17,572 ரூபாவை மட்டுமே வருமானமாக ஈட்டுவதாகவும், 40 சதவீத குடும்பங்கள் 26,931 ரூபாவை வருமானமாக ஈட்டுவதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

னினும் இலங்கையில் உள்ள பணக்கார குடும்பங்களில் 20 சதவீதத்தினர் சராசரியாக மாதத்திற்கு 196,289 ரூபாவை சம்பாதிக்கின்றனர்.

இதற்கிடையில், நடுத்தரமான 60 சதவீத குடும்பங்கள் சராசரியாக 56,079 ரூபாவை மாத வருமானத்தை ஈட்டியுள்ளன.

இதனடிப்படையில் இலங்கையில் 80 வீதமான குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் எவ்வளவு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை இது பிரதிபலிக்கிறது.

பணவீக்கமே இதற்கு பிரதான காரணமாக இருந்தது. எனினும், பணவீக்கம் என்பது பொருட்களின் விலையுயர்வை முறியடித்து அதிக வருமானத்தை ஈட்டவேண்டும் என்று மனப்பான்மையை பலருக்கு ஏற்படுத்தியுள்ளது.  

எனினும் இலங்கையில் உள்ள பணக்கார குடும்பங்களில் 20 சதவீதத்தினர் சராசரியாக மாதத்திற்கு 196,289 ரூபாவை சம்பாதிக்கின்றனர்.

இலங்கையில் 40வீதமான வறிய குடும்பங்களின் சராசரி மாத வருமானம் 26,931 ரூபாவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

3 வேளை உணவைக் கூட பூர்த்தி செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.