Developed by - Tamilosai
வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மூன்று சிறுமிகள் வீட்டில் இருந்து மாயமாகியுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
13 வயதிற்கும் 15 வயதிற்கும் உட்பட்ட சிறுமிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் மற்றும் உறவுக்கார சகோதரி ஒருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் சிறுமிகளின் பெற்றோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திடம் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது.