Developed by - Tamilosai
வவுனியாவில் இருந்து திருகோணமலைக்கு 3 கிலோவும் 100 கிராம் கஞ்சாவை கொண்டு சென்ற நபர் ஒருவரை இம்மாதம் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரஸாக் பயாஸ் இன்று (18) உத்தரவிட்டார்.
திருகோணமலைஇ உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மருதம் குளம், வவுனியா பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வவுனியா பகுதியில் இருந்து டாட்டா சிறியரக லொறியொன்றில் பொருட்களுடன் 3 கிலோவு100 கிராம் கஞ்சா பொதியை மறைத்து கொண்டு சென்ற போதே உப்புவெளி போதைப் பொருள் குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட போதே சந்தேக நபர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.