Developed by - Tamilosai
இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 24வது போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக்கொண்டன.
இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய குஜராத் அணி 20 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 4 இலக்குகளை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து, 193 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி, 20 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 9 இலக்குகளை இழந்து 155 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.
இதனால், குஜராத் அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.