தமிழ் ஓசை
தமிழ் ஓசை

227 கிலோ எடையுடைய கேரள கஞ்சா யாழில் மீட்பு

0 195

மண்டைதீவு கடலில் வைத்து 227 கிலோ எடையுடைய கேரள கஞ்சாவும் படகு ஒன்றும் மண்டைதீவு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடற்படையினர் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை சந்தேகத்திற்கு இடமான முறையில் படகு ஒன்று வருவதனை அவதானித்தனர்.

இதன்போது குறித்த படகினை சுற்றிவளைத்தவேளை படகிலிருந்தவர்கள் தப்பித்துச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் படகில் ஏழு மூட்டைகளிலிருந்த கஞ்சாவினையும் படகினையும் கடற்படையினர் மீட்டனர்.

மீட்கப்பட்ட படகும் கஞ்சாவும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.