தமிழ் ஓசை
தமிழ் ஓசை

2022 வரவுசெலவு திட்டம் – கூட்டமைப்பு ஆதரவு – விக்கி நடுநிலை – முன்னணி எதிர்ப்பு

0 401

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நாடாளுமன்றில் சமர்ப்பித்திருக்கிறார். அது தொடர்பிலான விமர்சனங்கள் நாடாளுமன்றிலும், வெளியிலும் எதிர்க்கட்சிகளாலும் முன்வைக்கப்படுகின்றன.

குறிப்பாக மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படவில்லை. பசுமை விவசாயத்தால் விவசாயிகளுக்கு நட்டம் ஏற்பட்டால் அதற்கு மானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது, ஆனால் அதற்கு எந்த ஒதுக்கல்களையும் அரசு வெளிப்படுத்தவில்லை.

பாதுகாப்பு செலவீனங்களை அரசாங்கம் இன்னும் குறைத்துக்கொள்ளவில்லை. மதரீதியிலான செயற்பாடுகளுக்கு கொரோனா தொற்றுகாலப்பகுதியிலும் அதிகளவான ஒதுக்கல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

நாளாந்த விலை அதிகரிப்புக்கள் தொடர்பில் அரசிடம் ஒரு தெளிவான நிலைப்பாடு இல்லை.

நாடாளுமன்றில் எதிர்விமர்சனங்களை முன்வைக்கும் சிறுபான்மை கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு தேவைப்படும் இடங்களில் தமது ஆதரவுகளை தெரிவித்துவிடுவது வழமையாகி வருகின்றது.

கடந்த வரவுசெலவு திட்டத்திற்கு கூட்டமைப்பு மற்றும் இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் விக்னேஸ்வரன் ஆதரவு தெரிவித்தார்கள். தமிழ் தேசிய மக்கள் முன்னணி , ஜேவிபி, ஜக்கிய மக்கள் சக்தி எதிர்த்தது.

அதுபோன்று இஸ்லாமிய எம்பிக்கள் போர்ட் சிற்றி சட்டமூலம், 20 ஆவது திருத்தம் என பல சந்தர்ப்பங்களில் அரசுக்கு துனண நின்று இருக்கின்றார்கள்.

அதனைத்தான் 2022 ஆம் ஆண்டு வரவுசெலவு திட்டத்திற்கும் இஸ்லாமிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்ய இருக்கின்றார்கள் என்பதை தற்போதே நெருக்கமானவர்களிடம் தெரிவித்திருக்கின்றார்கள். கூட்டமைப்பு ஆதரவு தெரிவிப்பதற்கான சந்தர்ப்பம் அதிகளவில் இருக்கின்றது. குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் நாடாளுமன்ற உரை அதனைதான் தெளிவாக்குகின்றது.

இம்முறை விக்னேஸ்வரன் வரவுசெலவு திட்ட வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது விடுவார் என கருதப்படுகின்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்பதற்கு சாத்தியகூறுகள் அதிகம் உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.