தமிழ் ஓசை
தமிழ் ஓசை

2022 பாதீடு; இலங்கையை சோமாலியாவாக மாற்றும் – சஜித் எச்சரிக்கை

0 67

2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இலங்கையை சோமாலியாவாக மாற்றும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மக்களின் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தவும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் திட்டங்கள் அதில் இல்லை எனக் குற்றம்சாட்டினார்.

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தெளிவான வேலைத்திட்டம் மற்றும் குறுகிய அல்லது நீண்ட காலச் செயற்திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

தற்போதைய குழப்பத்தில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு பதிலாக பேரழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் வகுக்கப்பட்டுள்ளன.

வரவு – செலவுத் திட்டத்தினூடாக கடன் சுமைக்குத் தீர்வு வழங்கப்படவில்லை எனவும் அதேவேளை வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் கையிருப்புக்களை அதிகரிப்பதற்கான திட்டங்களும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு விவசாயிகள் எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்து வரவு – செலவுத்திட்டத்தில் தெளிவான அறிவிப்புக்கள் இல்லை என்பதனால் இது உணவு பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.