Developed by - Tamilosai
” சஜித் பிரேமதாசவே அடுத்த ஜனாதிபதி வேட்பாளர். கட்சியின் முடிவு இதுவே. 2015 இல் செய்ததவறை மீண்டும் செய்யமாட்டோம்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்குள் எழுவர் தயாராக உள்ளனர் என வெளியாகும் தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” ஐக்கிய மக்கள் சக்தியின் பயணம் தனித்துவம்மிக்கது. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பலருக்கு எதிர்ப்பார்ப்புகள் இருக்கலாம். ஆனால் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் என்பதே கட்சியின் தற்போதைய முடிவு. உத்தியோகப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும்கூட அந்த நிலைப்பாட்டில்தான் கட்சி உள்ளது. எமது கட்சி தலைவரை அரச தலைவராக்குவதே எதிர்ப்பார்ப்பு.
ஏனெனில் 2015 இல் எடுத்த முடிவால் நாடும், கட்சியும் நாசமானது. அந்த தவறை மீண்டும் செய்யமாட்டோம்.” – என்றார்.
