Developed by - Tamilosai
200 மெகாவோட் மின்சாரத்தை விலைமனு கோராமல் அவசரமாக கொள்வனவு செய்யுமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மின்சார சபையின் தலைவரின் எதிர்ப்புக்கு மத்தியில் பொது முகாமையாளர் இந்த கடிதத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இரண்டு வருட காலத்திற்கு தனியார் டீசல் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து அவசர மின்சாரம் கொள்வனவு செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது.
இந்த அவசரக் கொள்வனவுகளுக்கு உடன்பாடு ஏற்பட்ட பின்னரும் அந்த தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் கொள்வனவுசெலுத்தி அதன் மூலம் மின்சார சபைக்கு பாரிய நிதி இழப்பை சந்திக்க நேரிடும்.நீர் மின் நிலையங்களின் ஊடான உற்பத்தி குறைந்து வருவதால் 7 மணி நேர மின்வெட்டு நீடிக்க நேரிடலாம் என்பதால் தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் வாங்குவதை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
அவசர மின்சாரம் கொள்வனவு செய்வதற்கான கோரிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நிராகரிக்கப்பட்டது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, போட்டி விலையில் தேவைகளுக்கு மாத்திரம் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமைச்சரவை தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும், திட்டமிட்டபடி பாரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படாமையால் 2024 ஆம் ஆண்டு வரை மின் உற்பத்தியில் தட்டுப்பாடு ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.