Developed by - Tamilosai
இலங்கையில் 12 வயது முதல் 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பூஸ்டர் தடுப்பூசியாக மொடர்னா மற்றும் பைஸர் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் 20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.