தமிழ் ஓசை
தமிழ் ஓசை

20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை உடனடியாக நீக்கவேண்டும்-மைத்ரிபால சிறிசேன!

0 214

தனியொரு கட்சியால் மீண்டும் ஆட்சியமைக்க முடியாது. அதனால் திருடர்களினதும் ஊழல்வாதிகளதும் ஆதிக்கம் இல்லாத புதிய கூட்டணி அரசாங்கத்தின் கீழ் புதிய அரசியல் கொள்கையொன்றை தயாரித்து புதிய பயணத்துக்கு தலைமைத்துவம் வழங்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தயாராக இருக்கிறது.

பிரதேச சபையிலிருந்து நாடாளுமன்றம் வரையில் சகல பிரிவுகளிலும் திருடர்களே இருக்கிறார்கள். பிரதேச சபையின் மணல் அனுமதிப் பத்திரத்தினூடாகவும் பணம் உழைக்கிறார்கள். நாடாளுமன்றத்துக்கு சென்றதும் வியாபர நடவடிக்கைகளினூடாக விலைமனு கோரளினூடாகவும் பணம் உழைக்கிறார்கள்.

இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவையும் ஒரேடியாக தூக்கி எறிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும்,

20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை உடனடியாக நீக்கவேண்டும் 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திலுள்ள குறைகளை திருத்தி மீண்டும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்தாா்.

Leave A Reply

Your email address will not be published.