Developed by - Tamilosai
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை நிலவுகின்றமையினால் எரிபொருள், நீர் பற்றாக்குறை காரணமாக எதிர்வரும் வாரம் 2 மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி 13 மற்றும் 15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையான நான்கு நாட்கள் உட்பட நாட்டின் அனைத்து வலயங்களிலும் இரண்டு மணித்தியாலமும் 15 நிமிடங்களுக்கு மின் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும்,
எதிர்வரும் 14 மற்றும் 19 ஆம் திகதிகளில் அனைத்து வலயங்களிலும் நாளாந்தம் மாலை 5.30 முதல் இரவு 10.00 மணி வரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்தடை அமுல்படுத்தப்படவவுள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
மின் தடை அமுல்படுத்தப்படும் குறித்த நாட்களில் ‘A’ முதல் ‘W’ வரையிலான 20 வலயங்களில் காலை 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையான காலப்பகுதியில் மின் தடை அமுல்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.