Developed by - Tamilosai
இலங்கையின் 74ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 197 சிறைக்கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இன்றைய தினம் விடுதலை செய்யப்படவுள்ளனர் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.இதன்படி, மஹர சிறைச்சாலையில் 20 கைதிகளும், கேகாலை சிறைச்சாலையில் 18 கைதிகளும், வெலிக்கடை சிறைச்சாலையில் 17 கைதிகளும், களுத்துறை சிறைச்சாலையில் 13 கைதிகளும், போகம்பரை சிறைச்சாலையில் 11 கைதிகளும், மட்டக்களப்பு சிறைச்சாலையில் 11 கைதிகளும், வாரியபொல சிறைச்சாலையில் 10 கைதிகளும் என 197 சிறைக்கைதிகள் விசேட மன்னிப்பில் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.