Developed by - Tamilosai
19ஆம் திருத்தச்சட்டத்தை மீள கொண்டுவந்தால் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச வகிக்கின்ற அமைச்சுப் பொறுப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு செல்லும் ஆகவே இது பயனற்றது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
இளைஞர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
19ஆம் திருத்தச்சட்டத்தின் ஊடாக நாடாளுமன்றுக்கு அதிகாரம் பெற்றுக்கொள்ளப்படுகிறது என்றும் அரச தலைவரினால் அமைச்சுப் பதவி வகிக்க முடியாது என்றும் தெரிவித்த அவர், எனவே அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தான் வகிக்கின்ற அமைச்சுப் பொறுப்பினை பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்குவார் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமைச்சர்களை நியமிக்கும்போது அரச தலைவர், பிரதமரின் ஆலோசனைகளைப் பெற்றே நியமிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இப்போது நான் பிரதமராகவும் அரச தலைவராக மைத்திரிபால சிறிசேனவும் இல்லை, அரச தலைவரும் பிரதமரும் தற்போது சகோதரர்களாக இருக்கிறார்கள் என்றும் எனவே அவர்கள் இருவரும் கலந்துரையாடியே அமைச்சர்களை தெரிவு செய்வார்கள் எனவே தற்பொழுது 19ஆம் திருத்த சட்டத்தை மீள கொண்டுவருவது பயனற்றது என ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.தற்போதைய நிலைமையில் 19ம் திருத்தச் சட்டத்தை கொண்டுவருவது முக்கியமில்லை, தற்போதைய பிரச்சினை பொருளாதார நெருக்கடி தான் அதனையே முதலில் தீர்க்கவேண்டும் எனவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.