Developed by - Tamilosai
நாடு முழுவதும் நாளை முதல் 18, 19 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் முதற்கட்டமாக வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 18 தொடக்கம் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு மட்டும் பைஸர் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நாளையதினம் வவுனியா மாவட்டத்தில் 81 பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீள ஆரம்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.