Developed by - Tamilosai
மலையக மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக அரசியல் தலைமைகள் பொதுப்பணிகளில் இணைந்து செயற்படவேண்டும் என்று ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று தாம் ஆளும் தரப்பில் இருந்தாலும் கூட நாளை எதிர் தரப்புக்கு போகலாம்.
எனவே அரசியல் தலைமைகள் கட்சி ரீதியாகப் பிாிந்திருந்தாலும் மக்களின் நலன்களுக்காக மலையக தலைமைகள் ஒன்றிணையவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை கூட்டு உடன்படிக்கை இல்லாமை காரணமாக இன்று ஏற்பட்டுள்ள சம்பளப் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்வதற்காக எதிா்வரும் 22ஆம் திகதி பெருந்தோட்டத்துறை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் வீடமைப்புத் தொடர்பில் பேசிக்கொண்டிருக்கும் தருணத்தில் மலையக மக்களுக்கு காணி உரிமையைப் பெற்றுக்கொடுக்கும் முயற்சிகளை அனைவரும் இணைந்து முன்னெடுக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
150 வருடங்களாக பெருந்தோட்டங்களின் வசிக்கும் தொழிலாளா்களுக்கு காணி உரிமையில்லை. எனினும் தற்காலிகமாக பணிகளுக்கு வரும் தோட்ட முகாமையாளர்களுக்கு பெருந்தோட்டங்களி்ல் சொந்தக்காணிகள் இருப்பதாக ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்.