Developed by - Tamilosai
கொரியாவிற்கு தொழிலுக்கு சென்று கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் நாடு திரும்பிய நபரொருவர் Facebook மூலம் பெண் ஒருவருடன் நண்பராகியுள்ளார். நேற்று இருவரும் திஸ்ஸமஹாராமையிலுள்ள விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளனர்.
இதன்போது, மதுபானத்தை அருந்தக்கொடுத்து 15 பவுன் நிறையுடைய 2,750,000 ரூபா பெறுமதியான தங்க நகைகளை எடுத்துக்கொண்டு குறித்த பெண் தப்பிச் சென்றுள்ளார்.
அந்நபர் சென்ற காரையும் எடுத்துச்சென்றுள்ளதுடன், அதனை திஸ்ஸவாவிக்கு அருகில் நிறுத்தி விட்டு அந்த பெண் தப்பிச்சென்றுள்ளார்.
கொழும்பை சேர்ந்த பெண் ஒருவரே இதனை செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொள்கின்றனர்.