தமிழ் ஓசை
தமிழ் ஓசை

14 வயது சிறுமி மாயம்!

0 68

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தெல்தோட்டை பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கண்டி-கலஹா தெல்தோட்டை பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் பிரியதர்ஷினி எனும் சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

குறித்த சிறுமியின் பெற்றோரால் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் கலஹா காவல்துறையினர் குறித்த சம்பவம் தொடர்பில் அடுத்தகட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமி தொடர்பில் தகவல் அறிந்தால் 0775251791, 0787910688 இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.