Developed by - Tamilosai
புத்தளம் – ஆனமடுவ கொட்டுக்கச்சி வடத்த ஸ்ரீ சரணங்கர பிரிவெனாவில் மேலும் 14 மாணவ பிக்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக ஆனமடுவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
வடத்த ஸ்ரீ சரணங்கர பிரிவெனாவில் தங்கியிருந்து கல்வி கற்கும் மாணவ பிக்குகளுக்கே இவ்வாறு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த பிரிவெனாவில் இம்மாதம் முதலாம் திகதி 18 மாணவ பிக்குகளுக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டதுடன், கடந்த 10 ஆம் திகதி மீண்டும் 13 மாணவ பிக்குகளுக்குத் தொற்றிருப்பது கண்டறியப்பட்டது.
இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளான மாணவப் பிக்குகளுக்குத் தனித்தனியாக சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், மீண்டும் மூன்றாவது தடவையாக இன்று அங்கு கல்வி பயிலும் மாணவ பிக்குகளுக்கு அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, 14 மாணவப் பிக்குகளுக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஆனமடுவ சுகாதார வைத்திய அதிகாரி ரவி அபேரத்ன தெரிவித்தார்.
சுமார் 65 மாணவ பிக்குகள் தங்கியிருந்து கல்வி பயிலும் வடத்த ஸ்ரீ சரணங்கர பிரிவெனாவில், 10 சிறுவர்களும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.