Developed by - Tamilosai
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 19 பேர் உயிரிழந்தனர்.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (09) உயிரிழந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கையில் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 927 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களுள் 03 ஆணும் ஒரு பெண்ணும், 60 வயதுக்கு மேற்பட்டோரில் 08 ஆண்களும் 07 பெண்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.