Developed by - Tamilosai
கொழும்பில் இருந்து கிண்ணியா நோக்கி பெட்ரோல் ஏற்றிக் கொண்டு சென்ற எரிபொருள் தாங்கி ஒன்று குருநாகல் பகுதியில் தடம் புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தாங்கி தடம் புரண்டு விபத்திற்குள்ளாகும் போது தாங்கியினுள் 13,200 லீற்றர் பெட்ரோல் இருந்துள்ளது. இதன்போது பெருமளவிலான எரிபொருள் கசிந்து வீணாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மழையுடனான காலநிலை காரணமாக வீதியில் இருந்து வழுக்கிச் சென்று விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனவும் இது தொடர்பில் மேலதிக விசாரணை குருநாகல் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.