தமிழ் ஓசை
தமிழ் ஓசை

13 வயது சிறுமி துஷ்பிரயோகம் ஆசிரியர் கைது

0 193

13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் மேலதிக வகுப்பு நடத்தி வந்த ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாணந்துறையில் பயிற்சி வகுப்பு நடத்தி வரும் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான ஆசிரியர் சிறுமியை புத்தக அறைக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வகுப்பு முடிந்ததும் நடந்த சம்பவத்தை சிறுமி தனது தந்தையிடம் கூறியதையடுத்து பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகநபரான ஆசிரியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.