தமிழ் ஓசை
தமிழ் ஓசை

” 13 ” குறித்து தமிழ் பேசும் மக்களின் தலைவர்கள் நாளை யாழில் சந்திப்பு

0 353

 13 ஆம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக, அது ஆரம்ப கட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே, நடைமுறைப்படுத்துவதற்கு  இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கான கலந்துரையாடல் நாளை 2 ஆம் திகதி காலை 10 மணி முதல் யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் நடைபெறவுள்ளது.  

இக்கூட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம்,  நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன்,  தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,  ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், 

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் , ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,  தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என். ஸ்ரீகாந்தா  ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.