Developed by - Tamilosai
அரசாங்கத்தை விட்டு வெளியேறாமல் 11 பங்காளிக் கட்சிகளும் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்தும் புலம்பிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அஜித் பி. பெரேரா குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கட்சிகள் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டால், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் அரசாங்கத்தை விட்டு வெளியேற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறு அரசாங்கத்தை விட்டு வெளியேறிய பின்னரும் அவர்களால் அரசியலில் ஈடுபட முடியும் என்றும் அஜித் பி. பெரேரா சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்திற்குள் இருக்கும் குறித்த கட்சிகள் ஊடக சந்திப்புகளில் வெளிப்படையாக பேசினாலும் அமைச்சரவை கூட்டங்களின்போது மௌனமாக இருப்பதாகவும் அஜித் பி. பெரேரா குற்றம்சாட்டினார்.