Developed by - Tamilosai
நாட்டை வந்தடைந்த கப்பலில் இருந்து கடந்த ஆறு நாட்களின் பின்னர், எரிவாயுவினை தரையிறக்கும் பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
11 நாட்களுக்குப் பிறகு இன்றைய தினம் முதல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் இடம்பெறும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
முதன்மையாக வணிக நிலையங்கள், தகன நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு எரிவாயு இருப்புக்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் விற்பனை குறைந்த எண்ணிக்கையிலான வீட்டு பாவனைக்கு எரிவாயுவை வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.