தமிழ் ஓசை
தமிழ் ஓசை

100 மில்லி மீற்றருக்கும் அதிக பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு

0 112

 குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையாகக் காணப்படுகின்றது.

கிழக்குக் கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்பில் இது தற்போது நிலை கொண்டுள்ளது. 

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். 

மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையாகக் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முல்லைத்தீவிலிருந்து காங்கேசந்துறை ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புக்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு முதல் மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது கிழக்கு முதல் வடகிழக்கு வரையான திசைகளிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும். 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புக்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.