தமிழ் ஓசை
தமிழ் ஓசை

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் – சாரதி பலத்த காயம்

0 219

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் பகுதியில் 09.12.2021 அன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி படுங்காயம்பட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

நுவரெலியா பகுதியிலிருந்து கொட்டகலை பகுதிக்கு சென்ற கார் ஒன்று நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் சென்.கிளயார் பகுதியில் வீதியை விட்டு விலகி குறித்த கார் சுமார் 100 அடி பள்ளத்தில்   பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேற்படி காரில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவரே இவ்வாறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதி மதுபானம் அருந்தியிருந்ததாகவும், இதனால் அவரின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தலவாக்கலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.