தமிழ் ஓசை
தமிழ் ஓசை

👩🏻‍🦱 😄சிறுவர் உலகம் : தேனீயும் .. கொடுக்கும் 🐝🐝

0 51

ஒரு மரத்தில் தேன் கூடு ஒன்று இருந்தது.தேனீக்களின் தலைவியாகிய ராணித் தேனிக்கு கடவுளை சந்திக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்ததால்,அது கடவுளை நினைத்து தவம் செய்தது.

ராணித் தேனியின் முன் கடவள் தோன்றி..’உனக்கு என்ன வரம் 

வேண்டும்? “என்று கேட்டார்.

‘இறைவா… என்னிடமிருக்கும்  தேனை நாடி வருவோரைக்கொட்டி…அவர்கள் சகிக்க முடியாத வேதனையை அனுபவிக்குமாறு செய்து அருள வேண்டும்’ என்று ராணித் தேனி கேட்க…கடவுளுக்கு வருத்தம் ஏற்பட்டது.

‘தேனியே..பிறர்க்கு உதவ வேண்டும் என நீ கேட்டிருந்தால்  எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும்.ஆனால் நீயோ பிற்ர்க்கு  தொல்லை தரவேண்டும் என வரம் கேட்கிறாய்.நீ கேட்ட வரத்தை கொடுக்கிறேன்,ஆனால் பிறரை துன்புறுத்தவேண்டும் என நினைக்கும் உனக்கு ஒரு பாடம் கற்பிக்க விரும்புகிறேன்..எனது வரம் மூலம் உனக்கு கொடுக்கு ஒன்று முளைக்கும்.அந்த கொடுக்கினால் மற்றவர்களை கொட்டி துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும்போது உன்  கொடுக்கின் நுனி உன்னால் கொட்டப்பட்டுள்ளவரின் உடலில் ஒட்டிக்கொள்ளும்.உடன் நீ இறந்து விடுவாய் “என்று கூறி மறைந்தார்.

அன்றுமுதல் தேனி  யாரையும் கொட்டவில்லை.ஏனெனில் கொட்டினால் அது  இறந்துவிடுமே.

வன்முறையால் அழிந்துவிடுவோம்  ஆகவே  வன்முறையில் ஈடுபடாமல் நாம் பிறர்கு நன்மை செய்யவேண்டும்…அப்படி நடந்தால் நமக்கும் நன்மை  வந்து சேரும்.

Leave A Reply

Your email address will not be published.