Developed by - Tamilosai
திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிண்ணியா தாயிப் நகர், நடுவூற்று சுனாமி வீட்டுத்திட்டத்தில் வசித்து வரும் 37 வயதுடைய சந்தேகநபரொருவர் நீண்ட நாட்களாக ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரிடம் இருந்து 7.41 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் திருகோணமலை பிரிவினர் தெரிவித்தனர்.