தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

0 443

திருகோணமலை பிரதேசத்தில் கட்டுத்துவக்கு மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவரைக் கைது செய்துள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சீனக்குடா இரகசியப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து வீடொன்றைச் சோதனையிட்டபோது அனுமதிப்பத்திரம் இன்றி வைத்திருந்த கட்டுதுவக்கு ஒன்றும், 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வீட்டிலிருந்து 33 வயதுடைய பெண்ணொருவரை சந்தேகத்தின் பெயரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமையக் கைப்பற்றப்பட்ட கட்டுத்துவக்கு மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் அவருடைய தந்தையுடையது என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் பெண்ணின் தந்தை வீட்டில் இருக்கவில்லை எனவும் வேலை நிமிர்த்தம் கொழும்புக்குச் சென்று இருந்ததாகவும் குறித்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பெண்ணின் தந்தையை சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணை இன்றையதினம் திருகோணமலை நீதவான் முன்னிலையில் முன்னிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.