தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட நபர் விளக்கமறியலில்

0 267

 திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 5 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரஸாக் பயாஸ் இன்று (4) உத்தரவிட்டார்.

திருகோணமலை, மின்சார நிலைய வீதி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் திருகோணமலை பகுதியிலுள்ள மாதா கோவில் பகுதியில் ஐந்து மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் நின்ற போது துறைமுக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் வாசஸ்தலம் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.