Developed by - Tamilosai
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், தன்னை பிணையில் விடுவிக்குமாறு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவுக்கு எதிராக ஆட்சேபனைகளை முன்வைக்கவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (09) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இந்த மனு மேனகா விஜேசுந்தர மற்றும் நீல் இத்தவெல ஆகியோரடங்கிய நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் தனது சேவைபெறுநருக்கு எதிராக புத்தளம் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.