Developed by - Tamilosai
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டுமெனத் தெரிவித்து தொழிற்சங்கங்களால் எதிர்வரும் 06 ஆம் திகதி முன்னெடுக்கப்படும் ஹர்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஆதரவு தெரிவிப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளவிய ரீதியாக இடம்பெறும்,ஹர்தாலுக்கு அதிபர்கள், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை அறிவித்து பாடசாலைக்குச் செல்லாது ஆதரவு வழங்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.