தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஸ்புட்னிக்-லைட் தடுப்பூசிக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதியளித்துள்ளது

0 202

ஒரு டோஸ் ஸ்புட்னிக்-லைட் தடுப்பூசிக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதியளித்துள்ளதாக மத்திய சுகாதார துறை மந்திரி  மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் ஸ்புட்னிக்-லைட் கொரோனா தடுப்பூசியை ரஷியாவின் கேமலேயா நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த தடுப்பூசியை இந்தியாவில்  டாக்டர் ரெட்டி லேபரட்டரிஸ், சீரம் நிறுவனம், பெனாகியா பயோடெக்,ஹெட்டிரோ உள்ளிட்ட நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன.

இந்த தடுப்பூசி தனியார் மூலமாக மட்டுமே கிடைக்கும். அரசாங்கம் இந்த தடுப்பூசியை கொள்முதல் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.