தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வௌ்ளத்தில் தத்தளிக்கும் நுவரெலியா

0 252

நுவரெலியாவில் பெய்த கடும் மழையால் என்றும் இல்லாதவாறு பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் நுவரெலியா பொரலந்த, கந்தப்பளை, கல்பாலம், இராகலை, நடுகணக்கு, ஐபொரஸ்ட், கோணபிட்டிய, டயகம உட்பட பல பிரதேசங்களிலுள்ள விவசாய நிலங்களில் வெள்ளநீர் நிரம்பியுள்ளது.

 பல ஏக்கர் விவசாயக் காணியில் உற்பத்தி செய்யப்பட்ட உருளைக் கிழங்கு மற்றும் மரக்கறி உற்பத்தியில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

அதேவேளை தாழ்ந்த பிரதேசங்களிலுள்ள வீடுகளில் வெள்ளநீர் புகுந்ததால் பல இடங்களில் வீடுகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

நுவரெலியா இராகலை பிரதான வீதியில் கல்பாலம் கோட்லோஜ் சந்தியில் வெள்ளநீர் நிரம்பியதால் போக்குவரத்தும் சில மணிநேரம் தடைப்பட்டுள்ளது.

இங்குள்ள வர்த்தக நிலையங்களிலும் வெள்ள நீர் புகுந்ததால் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.