Developed by - Tamilosai
இன்று(13) அதிகாலை 1 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் கத்திக் குத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கத்திக் குத்துத் தாக்குதலுக்குள்ளான நபர் படுகாயமடைந்து பலத்த காயத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மன்னார் வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த நபர் மீது வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்த நபர் ஒருவர் கத்தியால் குத்தியதாக தகவல் வெளியாகியுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.