தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வைத்தியசாலைகள் இடவசதி மற்றும் படுக்கைகள் இல்லாமல் இயங்குகின்றன -ஹேமந்த ஹேரத்

0 243

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் திடீர் அதிகரிப்புக் காரணமாக வைத்தியசாலைகள், இடவசதி மற்றும் படுக்கைகள் இல்லாமல் இயங்குகின்றன என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

கடந்த இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டார்.

ஏனைய நோயாளிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தைத் தவிர்ப்பதற்காக, 14,000 படுக்கைகள் தயார்நிலையிலும் 6,000 படுக்கைகள் பயன்பாட்டிலும் உள்ளதாகவும் கொரோனா நோயாளிகளுக்கான ஏற்பாடுகளை வைத்தியசாலைகள் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 70 அதி தீவிர சிகிச்சைப் பிரிவின் படுக்கைகளில், 59 படுக்கைகள் மாத்திரமே பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

தொற்றாளர்களின் அதிகரிப்பு ஒரு நல்ல அறிகுறி அல்ல என்று குறிப்பிட்ட அவர், தொற்று பரவுவதைத் தடுக்க அனைவரும் தமக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, கடந்த சில தினங்களில் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸைப் பெற்றுக்கொள்வதில் பொதுமக்களிடத்தில் ஆர்வம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், நாளாந்தம் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசியினை பெறுவதற்காகத் தடுப்பூசி மையங்களுக்கு பிரவேசிப்பதாகக் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.