தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு

0 60

பதுளை ஊவா மாகாண பொது வைத்தியசாலையில் பல நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான உயிர் காக்கும் மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால், ஏராளமான இதய நோயாளிகள், சுவாச நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், புற்றுநோயாளிகள், நாய் கடியால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் ஆய்வகப் பரிசோதனைகள் 50 வீதத்திற்கு மேல் குறைந்துள்ளதாகவும், சத்திர சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் தையல் நூல் மற்றும் எலும்பு முறிந்தால் பயன்படுத்தப்படும் பிளேட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

நாய் கடியால் பாதிக்கப்படும் நோயாளிகள் மீண்டும் மருத்துவமனைகளில் இருந்து திருப்பி அனுப்பப்படுவதாகவும், அவதானமாக இருக்குமாறும் ஆலோசனை மாத்திரமே வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் வாழ்வுரிமை மீறப்பட்டுள்ளதாக அவசர முகாமைத்துவ பிரிவின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.