Developed by - Tamilosai
இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளில் கடுமையான மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேற்று மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரையாற்றும் போதே அவர் இதனைக் தெரிவித்தார்.
நாட்டில் சகல விடயங்களுக்கும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டுக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
