Developed by - Tamilosai
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்படாமையால், அதன் ஊழியர்கள் கடமைகள் எதுவுமின்றி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இயங்காவிட்டாலும், பணியாளர்கள் நாளாந்தம் பணிபுரிவதாகவும், இதற்காக மாதாந்தம் சுமார் 100 மில்லியன் ரூபாவை செலவிட வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.