Developed by - Tamilosai
மொனராகலையில் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் ஏற்பட்ட பணி அழுத்தத்தை தாங்க முடியாமல் தனமல்வில பகுதியைச் சேர்ந்த மிஹிரன் சதுரங்க என்பவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
பணியிலிருந்து விலக பல தடவைகள் விண்ணப்பித்தும் நிர்வாகம் அனுமதிக்காததால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் உயிரிழப்பதற்கு முன்னர் அவர் தற்கொலை கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.