Developed by - Tamilosai
கெரவலப்பிட்டிய, யுகதனவி மின்நிலைய ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்பில் நாளை (04) தீர்மானிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாது அமெரிக்க ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.