Developed by - Tamilosai
நேற்று (13) மாலை முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட முத்தையன் கட்டுப்பகுதியில் வயல் உழவிற்காக உழவு இயந்திரத்தினை வீதியால் செலுத்திக்கொண்டிருந்த போது உழவு இயந்திரம் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து மின் கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
மேலும் விபத்திற்குள்ளானதில் 32 வயதுடைய குடும்பஸ்தர் (சாரதி) ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்ட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான விசாரணையினை ஒட்டிசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.