Developed by - Tamilosai
நேற்று (04) மாலை வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாயா மாவத்தை பகுதியில் கட்டிடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து 46 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர்12 மாடி கட்டிடம் ஒன்றின் 11வது மாடியை சுத்தம் செய்யும் போது ஜன்னில் இருந்து கீழே விழுந்ததுள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.